அதோ அந்த ஆற்றங்கறையில்
ஒடையின் இடுக்கில் வளர்ந்த
அந்த செடியின் அழகிய வண்ண
மலர்களின் இதழில் இருக்கும்
பனித்துளிகளின் மேனியில்
ஒளிந்து இருக்கும் ஆகாய
சூரியன் வெளியே வர
துடிக்கும் அந்த வேலையில்
உடல் முழுவதும் வண்ணங்களை
பூசி இலைப்பார இடம் தேடி
வந்த வண்ணத்துப் பூச்சியும்
வண்ண மலர்களின் இதழ்களில்
இடம் பிடிக்க அழகான காட்சிகளை
நிழல் படம் எடுத்த பனித்துளியை
சிதறடித்து சிறு துளிகள்
பல துளியாக படர்ந்து அழகு
மிகு ஆதவனை வரவேற்றது.
ஆதவனின் ஆனந்தத்தை
கண்ட வண்ன மலர்களும்
இதழ் விரித்து அவளது
கூந்தலில் அடைக்கலம் ஆனது.
அருண்தேவன்...
No comments:
Post a Comment