அலைபேசியில் அழைப்பு ஒலி
யாரென்று எடுத்தால் அழைப்பது
ஒரு மான் விழி தொலைவில்
இருந்தாலும் உன் குரலை கேட்கவே
அலைபேசியை அனுப்பிவைத்தானோ
நேரில் பார்க்கலாமா என்றது
என் தேவதையின் குரல்
பயணம் தொடங்கியது அந்த
நொடி உன்னை கான மைல்கள்
மனித்தூளிகளாய் கடந்தது
ஒவ்வொரு மனித்துளிகளும்
ஒரு யுகமானது எப்படியோ
வந்து விட்டேன் உன் இல்லம் தேடி
அழகு புன்னகையில் சிவந்த என்
தேவதையின் முகத்தை கண்டுவிட்டேன்
நான் பார்க்க அலங்காரம் செய்கிறயோ
மை விழிக்கு மை இட்டு என்னை
வீழ்த்த என் விழியை தேடுகிறயோ
இதழ்களுக்கு வர்ணம் அடிக்கிறாயோ
ரோஜா இதழ்களுக்கு வர்ணம் எதற்கு
அழகுக்கு மேலும் அழகு செர்த்து
என் கண்களை இமைக்காமல்
ரசிக்க வைக்கிறாய்
அருண்தேவன்...
No comments:
Post a Comment