காலை தூக்கம் கண்களை இமைக்க
அவசரமாக புறப்படு என்ற அம்மாவின்
குரலை கேட்டு விழித்தது கண்கள்
புத்தாடைகளெல்லாம் உடுத்தி
உறவினர்களின் படை சூழ
சிறு புன்னகையுடன் வாகனத்தில்
அமர்ந்து உன்னை பற்றிய
நினைவுடன் மனதில் ஆயிரம்
காதல் கவிதைகள் உதிக்க
அனைத்தையும் உனக்காக
பொக்கிஷமாய் என் இதய
ஓலைச்சுவடிகளில் பதித்து விட
திரும்பும் திசையெல்லாம் உன்னை
பற்றிய கற்பணையில் கவிதைகள் மலர
நான் நினைவிலே மிதக்க வாகனம்
வந்தடைந்தது உந்தன் அரண்மனைக்கு
என் கனவு கன்னி நீ தான் என
நினைத்து கற்பனையில் உன்னை
சிலை வடித்து என் இதய
கோவிலில் நிறுத்தும் வேலையில்
யாரோ என்னை அழைக்கிறார்கள்
எழுந்திரிடா நேரம் ஆச்சி போகனும்
என்று சொன்னது கண்கள்
விழிக்க இது கனவென்று
தெரியாமல் அனைத்தையும் நான்
ரசித்துக் கொண்டு இருந்தேன்...
No comments:
Post a Comment