மழைச்சாரலில் மலை உச்சியில்
ஏற்றிய தீப திரு ஒளியின்
வெளிச்சத்தில் என் விரல்களை
பற்றிக் கொண்ட என் காதல்
என்றும் இப்படியே நீடிக்க
தீப திரு ஒளியின் முன்
மேகங்கள் ஒன்றோடு ஒன்று
உரசி சப்த ஸ்வரங்களை இசைக்க
அனைத்து செடி கொடிகளும் இசைந்து
மரங்களின் நடன மேடையில்
நீ என் கைகளை பிடித்து என்னுடன்
மலைப்பாதையில் இனைந்து வருகையில்
நடைபாதையும் நகர்ந்தது
நட்சத்திரங்களும் மறைந்தது
உன் வெட்கத்தைப் பார்த்து
ஒரு நொடி என்னை விட்டு
பிரிந்தாய் உன் விரல்களை
விட்டு செல்லவில்லை என்று
என்னும் முன் தடம் மாறி
தவறி விழுந்தாய் நீ
மறுநொடி உன் விரல்களை
பிடிக்க காலம் என்னை
சிறைபிடித்தது தனிமை
என்னும் சிறையில்
தனிமனிதனாக வாழ
கற்றுக்கொள்கிறேன் நீ இல்லா
நொடிகளை உன் நினைவுகளுடன்
அருண்தேவன்...
No comments:
Post a Comment