ஒரு நாள் ஒரு நிமிடம்
கண் எதிரே
என் காதல் தேவதை
இமைக்காமல் ரசிக்கிறது கண்கள்
எதையோ எதிர்பார்த்து
துடிக்கிறது இதயம்.
உன் இதழ் அசைவில்
இழந்து விட்டேன் என்னை
கவலைகளை எல்லாம் மறந்தேன்
உன்னுடன் இருந்த நொடிகளில்
காலமெல்லாம் எப்படி இருப்பேன்
உன் விழிகளை மறந்து
அதிகமாய் உன்னை பிடிக்கும்
என்பதை விட வேறு என்ன
காரணம் உன்னை நேசிக்க.
நீ என்னுடன் இருந்த
நொடிகளே என் வாழ்வின்
சிறந்த தருணங்கள் அழியாது
மன்னில் புதையும் வரை.
இந்த உலகில் விலைமதிப்பற்ற
பொக்கிஷம் உன் புன்னகையே
நீ பேசும் வார்த்தைகளையே
பேசி பார்க்கிறேன் மனசுக்குள்.
என் மனதின் ஆசைகளை சொல்ல
இந்த கவிதைக்கு மட்டுமே தெரியும்.
அருண்தேவன்...
No comments:
Post a Comment