அழகுக்கு அழகு சேர்க்கும்
புன்னகையில் சிறு வெட்கம்
யாரும் பார்த்திராத நேரம்
கனவுலகில் நான்.
ரோஜா என்று நினைத்தேன்
நிலவாக மாறுகிறாய்
ரோஜாவை எட்டி பறித்து விடுவேன்
நிலவை பார்க்க மட்டுமே முடியும்.
காலம் நிலவிடம் அழைத்து
செல்லுமா மன்னில் புதைக்குமா
என் காதலை
என் கண்களும் மயங்கியது
உன் வெட்கத்தில் என்
இதயம் பறந்தது வானத்தில்
நானல்லவா போட்டிருக்க வேண்டும்
மாறுதலுக்கு நீ போட்டு விட்டாயோ
மூன்று முடிச்சு என் கைகளில்.
அருண்தேவன்...
No comments:
Post a Comment